மேலும் செய்திகள்
குடிநீர் வராததை கண்டித்து பெண்கள் சாலை மறியல்
02-Nov-2026
புதுச்சேரி: புதுச்சேரியில் கோவிலை தனிநபர் பூட்டியதை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி நைனார் மண்டபம் அடுத்த மூகாம்பிகை நகரில் திருச்செந்துார் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை அப்பகுதி பொதுமக்களிடம் வசூலித்து கட்டியதாக கூறப்படுகிறது. அந்த கோவிலை நேற்று காலை தனி நபர் ஒருவர் தனக்கு சொந்தமானது என்று கூறி திடீரென கோவிலின் கதவை பூட் டிவிட்டு சென்றார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் புதுச்சேரி- – கடலுார் சாலையில நேற்று காலை தீடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த முதலியார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., ஜான்குமார், முதலியார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதனம் செய்தனர். அதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
02-Nov-2026