விடுமுறை முடிந்து திரும்பிய மக்கள் போதிய பஸ் வசதி இல்லாமல் அவதி
புதுச்சேரி : தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து சென்னை செல்ல புதுச்சேரி பஸ் நிலையத்தில் போதிய அளவில் பஸ் இல்லாததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.தீபாவளி பண்டிகையொட்டி கடந்த 30ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.சென்னையில் பணி செய்யும் சிதம்பரம், காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த மக்கள் விடுமுறை முடிந்து நேற்று சென்னை புறப்பட்டனர்.இது தவிர, புதுச்சேரியில் இருந்து சென்னையில் பணியாற்றும் ஊழியர்களும் சென்னை செல்ல நேற்று மாலை புதிய பஸ் நிலையத்தில் குவிந்தனர்.ஒவ்வொறு 10 நிமிடத்திற்கும் ஒரு பஸ் சென்னைக்கு புறப்பட்டு சென்றாலும், மக்கள் கூட்டம் அலைமோதியது. போதிய பஸ் இல்லாததால் கூட்ட நெரிசலுடன் பஸ்சில் பயணித்தனர். போக்குவரத்து நெரிசல்
தென் தமிழக பகுதியில் இருந்து சென்னை சென்ற வாகனங்களும், விடுமுறையை கழிக்க புதுச்சேரி வந்த சுற்றுலா பயணிகளும் நேற்று மாலை புறப்பட்டனர். இதனால் இந்திரா சிக்னல், ராஜிவ் சிக்னல்களில் கடும் டிராபிக் ஜாம் ஏற்பட்டது. நுாறடிச்சாலையில் ராஜிவ் சிக்னல் துவங்கி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை வரை நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தது. ஒவ்வொரு வாகனமும் 15 நிமிடத்திற்கு மேலாக காத்திருந்து சிக்னலை கடந்து சென்றன.