உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கத்திரி வெயிலால் மக்கள் தவிப்பு; மாலையில் மழை பெய்ததால் ஆறுதல்

கத்திரி வெயிலால் மக்கள் தவிப்பு; மாலையில் மழை பெய்ததால் ஆறுதல்

புதுச்சேரி: கத்திரி வெயில் துவங்கிய முதல் நாளில் அனல் காற்று வீசியதை அடுத்து, மாலை நேரத்தில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். புதுச்சேரியில், நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வேலுார், சென்னை உள்ளிட்ட நகரங்களில், கத்திரி வெயிலுக்கு முதல் நாளிலேயே 100 டிகிரியை தாண்டியுள்ளது. இந்நிலையில், கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நேற்று 4ம் தேதி துவங்கி வரும் 28ம் தேதி நிறைவடைகிறது. கத்திரி வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க, மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. கத்திரி வெயில் துவங்கிய முதல் நாளில் நேற்று புதுச்சேரியில், 100.6 டிகிரி பாரன்கீட் அளவு பதிவாகியது. மதியம் நேரத்தில் அனல் காற்று வீசியது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். பொதுமக்கள் வெளியில் வராமல் வீட்டிலேயே முடங்கினர். மாலை 6:00 மணியளவில், திடீரென கருமேகம் சூழ்ந்து குளிர்காற்று வீசியது. பின் நகரப்பகுதியில் மழை பெய்ததை தொடர்ந்து, சாலையில், மழைநீர் ஓடியது. மழையுடன் பலத்த காற்று வீசியதை அடுத்து நகரப்பகுதியில் பல்வேறு இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. கத்திரி வெயில் துவக்க நாளில் மழையுடன் குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் சற்று ஆறுதல் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை