அரியாங்குப்பத்தில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த மக்கள் மன்றத்தில், பொதுமக்கள் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக மனு அளித்தனர். புதுச்சேரி போலீஸ் ஸ்டேஷன்களில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அரியாங்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன் தலைமை தாங்கினார். பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு, குடும்ப பிரச்னை, சிவில் பிரச்னை கள் தொடர்பாக, மனு அளித்தனர். மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக எஸ்.பி., தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.