மேலும் செய்திகள்
நெட்டப்பாக்கத்தில் மக்கள் மன்றம் முகாம்
03-Mar-2025
புதுச்சேரி; மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் மக்கள் மன்றம் நடந்தது. டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் தலைமை தாங்கி, பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.வடக்கு எஸ்.பி., வீரவல்லவன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், முத்துக்குமரன் உட்பட பலர் பங்கேற்றனர். மங்கலம் போலீஸ் நிலையத்தில், எஸ்.பி.,க்கள் வம்சித ரெட்டி, சிவம், தவளக்குப்பத்தில் தெற்கு எஸ்.பி., பக்தவாசலம், முத்தியால்பேட்டையில் கிழக்கு எஸ்.பி., ரகுநாயகம் தலைமையிலும், காரைக்காலில் சீனியர் எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா, எஸ்.பி., சுப்ரமணியன் தலைமையிலும் மக்கள் மன்றம் நடந்தது. போக்குவரத்து வடக்கில் சீனியர் எஸ்.பி., பிரவீன் திரிபாதி, எஸ்.பி., செல்வம் தலைமையிலும், போக்குவரத்து தெற்கில் எஸ்.பி., மோகன்குமார் தலைமையிலும் மக்கள் மன்றம் நடந்தது.நேற்றைய மக்கள் மன்றத்தில், பொதுமக்களிடம் இருந்து 96 புகார்கள் பெறப்பட்டு, அதில் 52 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிலுவையில் உள்ள புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.
03-Mar-2025