உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிசியோதெரபி சிகிச்சை முகாம்

பிசியோதெரபி சிகிச்சை முகாம்

புதுச்சேரி: மணக்குள விநாயகர் பிசியோதெரபி கல்லுாரி சார்பில் உலக பிசியோதெரபி நாளை முன்னிட்டு, கல்லுாரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மருத்துவம் மற்றும் பிசியோதெரபி சிகிச்சை முகாம் கல்லுாரி வளாகத்தில் நடந்தது. முகாமினை, மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி இயக்குனர் வெங்கடாசலபதி துவக்கி வைத்தார். முகாமில் மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள் கலந்து கொண்டு பொது மருத்துவம், எலும்பு சிகிச்சை, மனநல மருத்துவம், மகளிர் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் அளித்தனர். இதில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் பங்கேற்று பயனடைந்தனர். ஏற்பாடுகளை பொறுப்பு டீன் விவேக், முத்துக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை