மேலும் செய்திகள்
ரயிலில் கஞ்சா கடத்திய இரு வாலிபர்கள் சிக்கினர்
17-Nov-2024
ஸ்ரீமுஷ்ணம், : ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் கஞ்சா கடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் வீரசேகரன், சப் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் நேற்று மாலை ஆண்டிமடம் சாலையில் வாகன சோதனை செய்தனர். அந்த வழியாக வந்த ஸ்ரீமுஷ்ணம் பழனியாண்டவர் கோவில் தெருவை சேர்ந்த பழனிசாமி, பெண்ணாடம் ஜெயராஜ் ஆகியோரது பைக்கை சோதனை செய்தனர். இதில், ஒன்றரை கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.அவர்களிடம் விசாரித்ததில், பழனிசாமி வீட்டில் மேலும் மூன்றரை கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பதும், விருத்தசாலம், செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அக்பர், 48; என்பவருக்கும் இதில் தொடர்பு உள்ளதும் தெரியவந்தது.அதையடுத்து, கஞ்சா கடத்திய பழனிசாமி, 45; பெண்ணாடம் ஜெயராஜ், 25; விருத்தாசலம் அக்பர், 48; ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, 5 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.கஞ்சா கடத்துவதற்கு பயன்படுத்திய இரண்டு பைக்குகளையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய சம்சுதீன் என்பவரை தேடி வருகின்றனர்.
17-Nov-2024