உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் அத்துமீறி நுழைந்த நபர்கள்: போலீசில் புகார்

தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் அத்துமீறி நுழைந்த நபர்கள்: போலீசில் புகார்

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் அத்துமீறி நுழைந்த நபர்கள் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 11ம் தேதி மாலை 25 வயதுக்குட்பட்ட 4 இளைஞர்கள், இரண்டு பைக்குகளில் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்தவர்களிடம் தகாத வார்த்தைகளால் திட்டி, வாய் தகராறில் ஈடுபட்டதால், வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.முதற்கட்ட விசாரணைகளில் அவர்கள் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியரின் உறவினர் என தெரியவந்துள்ளது. இச்செயல், பல்கலைக்கழகத்தின் அமைதியான கல்விச் சூழலை குறைக்கும் வகையில், மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.இந்த விவகாரத்தின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு, அத்து மீறியவர்களுக்கு எதிராக முழுமையான விசாரணை மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழகத்தின் மாண்பு மற்றும் நன்மதிப்பை பாதிக்கும் வகையில் தவறான செய்திகளையும், தகவல்களையும் பரப்ப வேண்டாம் என பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி