உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எஸ்.பி., தலைமையில் போலீசார் கொடி அணிவகுப்பு

எஸ்.பி., தலைமையில் போலீசார் கொடி அணிவகுப்பு

திருக்கனுார், : திருக்கனுார் பஜார் வீதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எஸ்.பி., வம்சித ரெட்டி தலைமையில் நடந்த போலீசார் கொடி அணிவகுப்பில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வியாபாரிகளுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பொதுமக்கள் எந்தவித சிரமமின்றி பொருள்களை வாங்கி செல்லும் வகையில், மேற்கு எஸ்.பி., வம்சித ரெட்டி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராஜகுமார், கீர்த்திவர்மன், சப் இன்ஸ்பெக்டர்கள் பிரியா, தமிழரசன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட போலீசார் நேற்றிரவு திருக்கனுார் பஜார் வீதியில் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.அப்பொழுது, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மீண்டும் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப் பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., எச்சரிக்கை விடுத்தார்.தொடர்ந்து, பஜார் வீதியில் இருந்த பட்டாசு கடைகளை பார்வையிட்டு, உரிமம் பெறப்பட்டுள்ளதா, பாதுகாப்பு உபகரணங்கள் சரியாக உள்ளதா என சோதனை செய்தனர். பின்னர், எல்லைப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், குற்ற பின்னணி உடையவர்கள் வீட்டிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை