உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலி வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு; போலீசார் வழிகாட்டுதல் அறிவிப்பு

போலி வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு; போலீசார் வழிகாட்டுதல் அறிவிப்பு

புதுச்சேரி : வெடிகுண்டு மிரட்டல் அழைப்புகள் வந்ததால், மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல் குறித்து புதுச்சேரி போலீசார் விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து புதுச்சேரி காவல்துறை விடுத்துள்ள அறிவிப்பு: போலி வெடிகுண்டு மிரட்டல் அழைப்புகள், தேவையற்ற பீதி, பொது அமைதிக்கு பாதிப்பு மற்றும் அவசர சேவைகள் வீணாகப் பயன்படுத்தப்படுவதற்கு காரணமாகின்றன. ஆகையால், வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு வந்தால், அதனை அலட்சியாக விடாதீர்கள், அமைதியாக இருங்கள். அழைப்பாளியின் குரல், வார்த்தைகள் மற்றும் பின்னணி சத்தங்களை கவனியுங்கள். உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு (100, 112) தகவல் அளிக்கவும். உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பகிரவோ, மற்றவர்களை பயமுறுத்தவோ வேண்டாம். சமூக ஊடகங்களில் வதந்திகளை பரப்பாதீர்கள். போலீசார் மற்றும் அவசர சேவை பணியாளர்களின் வழிகாட்டுதல்கள் பின்பற்றவும். போலி அழைப்புகள் குற்றமாகும். போலி அழைப்புகளை செய்யவும் அல்லது பரப்பவும் சட்டவிரோதம். இதற்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறப் பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை