உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வங்கி மேலாளர் வீட்டில் 15 சவரன் நகை மாயம் போலீசார் விசாரணை

வங்கி மேலாளர் வீட்டில் 15 சவரன் நகை மாயம் போலீசார் விசாரணை

புதுச்சேரி: வங்கி கிளை மேலாளர் வீட்டில் 15 சவரன் தங்க நகைகள் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முதலியார்பேட்டை, ஜெயமூர்த்தி ராஜா நகரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி, 43; காலாப்பட்டு எஸ்.பி.ஐ., வங்கி கிளை மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் கதிரேசன் மதுரையில் உள்ள தனியார் தொலை தொடர்பு கம்பெனியில் பணியாற்றி வருவதால், இவர் தனது மாமியார் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் வேல்ராம்பட்டு ஏரிக்கரையை சேர்ந்த கோகிலா, 50; என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், ஜெயலட்சுமி கடந்த மே 26ம் தேதி உறவினர் நிகழ்ச்சிக்காக தன்னுடைய ரூ. 12 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பலான 15 சவரன் தங்க நகையை அணிவித்து சென்று விட்டு மீண்டும் அன்று இரவு அவை அனைத்தையும் தனது வீட்டின் பீரோவில் வைத்துள்ளார். இதற்கிடையே, கடந்த ஜூன் 21ம் தேதி நடந்த உறவினர் நிகழ்ச்சிக்கு அணிந்து செல்வதற்காக, ஜெயலட்சுமி பீரோவில் வைத்திருந்த தனது நகைகளை பார்த்தபோது காணவில்லை. வீட்டில் வேலை செய்துவரும் கோகிலாவிடம் கேட்டபோது, நகை மாயமானது தொடர்பாக பதில் அளிக்காமல், சம்பவத்தை திசை திருப்பும் வகையில் பேசியுள்ளார். இந்நிலையில், வீட்டின் பீரோவில் வைத்திருந்த நகைகள் மாயமானது குறித்து ஜெயலட்சுமி முதலியார்பேட்டை போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !