உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நேபாள வாலிபர் மர்ம சாவு போலீசார் விசாரணை

நேபாள வாலிபர் மர்ம சாவு போலீசார் விசாரணை

புதுச்சேரி : ஓட்டலில் வேலை பார்த்த நேபாள வாலிபர் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் சரத்குமார்; சாரம் பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலில் நேபாளம் நாட்டை சேர்ந்த ராபின், 35, என்பவர், வேலை செய்து வந்தார். இவர், முத்தியால்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில், சக ஊழியர்களுடன் தங்கியிருந்தார். சில வாரங்களுக்கு முன், ஓட்டலில் இருந்து ராபினை வேலையில் இருந்து நீக்கி விட்டனர். அவர் தங்கியிருந்த அறைக்கு வரவேண்டாம் ஊழியர்கள் தெரிவித்தனர். அதையடுத்து, அடிக்கடி அவர் தங்கியிருந்த அறைக்கு ராபின் சென்று வந்தார். இந்நிலையில், ஓட்டலில் வேலை செய்யும் ஊழியர்கள் இருவர் நேற்று பணியை முடித்து, முத்தியால்பேட்டையில் தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்தனர். வீட்டில் இருந்த அறையில், ராபின் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இறந்து கிடந்த இடத்தில், வலி நிவாரண மாத்திரைகள் கிடந்துள்ளன. மாத்திரை சாப்பிட்டதால், இறந்தாரா அல்லது வேறு காரணத்தில் இறந்தாரா என, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை