உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பைக் திருட்டு போலீஸ் விசாரணை

பைக் திருட்டு போலீஸ் விசாரணை

அரியாங்குப்பம்,: பைக்கை திருடி சென்ற மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர். வில்லியனுார் அடுத்த கொடாத்துாரை சேர்ந்தவர் முருகன், 28; தனியார் கம்பெனி ஊழியர். இவர் தற்போது, தவளக்குப்பத்தில் வாடகை வீட்டில், வசித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் தனது பைக்கை வீட்டு முன்பு நிறுத்தியிருந்தார். மறுநாள் காலையில் பார்த்தபோது, பைக்கை காணவில்லை. பல இடங்களில் தேடியும் பைக் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், தவளக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் வழக்குப் பதிந்து, பைக் திருடிய நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !