உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கரை ஒதுங்கிய பெண் சடலம் போலீசார் விசாரணை

கரை ஒதுங்கிய பெண் சடலம் போலீசார் விசாரணை

புதுச்சேரி: பழைய துறைமுகம் அருகே வாயில் நுரை தள்ளியபடி கரை ஒதுங்கிய வடமாநில பெண் சடலம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் பயணிகள் கடலில் இறங்கி குளிக்கும் போது ராட்சத அலையில் சிக்கி இறக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி பழைய துறைமுகம் அருகே கடற்கரையில், 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் ஒதுங்கியது. இதை பார்த்த பொதுமக்கள் ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்தவர் வடமாநில பெண் என, போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. அவர் இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை