உள்ளூர் செய்திகள்

பெண் மாயம்

புதுச்சேரி: கடைக்கு சென்ற பெண் மாயம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர்  குமரகுருபாலன், 45; சற்று மனவளர்ச்சி குன்றியவர். இவரது மனைவி துர்காதேவி. இவர் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்து கடைக்கு சென்றார். மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. உறவினர் உள்ளிட்ட பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்