பெண் மாயம்
வில்லியனுார்: வில்லியனுார் அடுத்த பங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ரஹமதுல்லா மனைவி ஷஷிமாபேகம், 40. இவரிடம் அதே பகுதியை சேர்ந்த பலர் மாதாந்திர சீட்டு கட்டி வந்தனர். இதனால் ஷஷிமாபேகத்திற்கு சீட்டு பணம் கொடுக்க முடியாமல் கடன் அதிகரித்தது. சீட்டு கட்டியவர்கள் வீட்டிற்கு வந்து பணம் கேட்டு சத்தம் போட்டனர். இதனால் மனமுடைந்த ஷஷிமாபேகம் நேற்று (நவ.,13) வீட்டில் இருந்து மாயமானார். இது குறித்து உறவினர் ஷாஜகான் கொடுத்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனர்.