உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தனியாக வசித்த பெண் சாவு: போலீசார் விசாரணை

தனியாக வசித்த பெண் சாவு: போலீசார் விசாரணை

புதுச்சேரி: முத்தியால்பேட்டை, கார்கல் மடத்தை சேர்ந்தவர் புகழேந்தி; வியாபாரி. கணபதி செட்டிகுளம், வடக்கு தெருவில் உள்ள இவரது வீட்டின் முதல் மாடியில், செல்வராஜ் மனைவி உமா, 55, என்பவர், வாடகைக்கு தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் அந்த வீட்டின் எதிரே குடியிருந்து வரும் மனோஜ், புகழேந்தியை மொபைல் மூலம் தொடர்பு கொண்டு, உமா வசித்து வரும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக தெரிவித்தனர். இதையடுத்து, புகழேந்தி காலாப்பட்டு போலீசாருடன் அங்கு சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, உமா உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இதையடுத்து, உமா உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். புகழேந்தி புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை