உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வழிப்பறி வாலிபரிடம் போலீசார் விசாரணை

வழிப்பறி வாலிபரிடம் போலீசார் விசாரணை

புதுச்சேரி: முதலியார்பேட்டையில் கடந்த மாதம் 2ம் தேதி இரவு சாலையில் நடந்து சென்ற இரு பெண்ணிடம் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர், தங்க செயினை பறித்து சென்றார். அதேபோல் ரெட்டியார்பாளையத்தில் கடந்த 3ம் தேதி இரவு நடந்து சென்ற ஒரு பெண்ணிடம் தங்க செயினை மர்ம நபர் பறித்து சென்றார். இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் முதலியார்பேட்டை போலீசார், கடந்த 9ம் தேதி மகாராஷ்டிராவைச் சேர்ந்த அமுல், 33, என்பவரையும், இவருக்கு உதவிய சென்னையைச் சேர்ந்த ஷாகுல் ஹமீது, 36; மூர்த்தி, 52, ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ரெட்டியார்பாளையம் வழிப்பறியில் அமுல் ஈடுப்பட்டது தெரியவந்தது. அதையடுத்து ரெட்டியார்பாளையம் போலீசார், நேற்று அவரை, காவலில் எடுத்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை