மேலும் செய்திகள்
புரவி எடுப்பு திருவிழா
08-Jun-2025
பாகூர்: பாகூர் மற்றும் கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர்.புதுச்சேரியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் ஆபரேஷன் திரிசூல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, பாகூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பாகூர் மற்றும் கிருமாம்பாக்கம் பகுதியில் இன்ஸ்பெக்டர் சஜித், சப் இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று முன்தினம் ரவுடிகளின் வீடுகளில் சோதனை செய்தனர். பாகூர், கிருமாம்பாக்கம், சேலியமேடு, பிள்ளையார்குப்பம், சோரியாங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் திடீர் சோதனை மேற்கொண்ட போலீசார் ஆய்வு செய்தனர். சோதனையின் போது, போலீசார், ரவுடிகளிடம் சட்டம் ஒழுங்கு பிரச்னையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வெளியூர்களுக்கு சென்றாலோ, செல்போன் எண்களை மாற்றினாலோ அது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர்'.கிருமாம்பாக்கம் பகுதியில் 5 ரவுடிகளின் மீதும், பாகூர் பகுதியில் 3 ரவுடிகளின் மீதும், முன்னெச்சரிக்கையாக வழக்குப் பதிந்தனர்.
08-Jun-2025