உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அனுமதியின்றி பேனர் வைத்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு

அனுமதியின்றி பேனர் வைத்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு

பாகூர் : அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்ட சம்பவம் குறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரியில் பொது இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பேனர்கள் வைப்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்நிலையில், புதுச்சேரி - கடலுார் சாலை காட்டுக்குப்பம் கந்தன்பேட் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூராக டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருப்பதாக, பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை பிரிவு உதவி பொறியாளர் ஜெயராஜ் கிருமாம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.அதன்பேரில், காட்டுக்குப்பத்தை சேர்ந்த லட்சுமணன் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை