உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  போலீசார் அணி வகுப்பு

 போலீசார் அணி வகுப்பு

புதுச்சேரி: பொதுமக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி,மேட்டுப்பாளையம் போலீசார் அணி வகுப்பு நடத்தினர். பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையொட்டி, சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு படையெடுத்துள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி மேட்டுப்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் சாலையில் அணிவகுப்பு நடத்தினர். இதில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையிலும், போக்குவரத்து நெரிசல், ஆகியவற்றை தடுக்கும் வகையில் இந்த அணிவகுப்பு நடந்தது. மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் துவங்கி மேட்டுப்பாளையம் சந்திப்பு, ஐ.டி., சாலை, முத்திரப்பாளையம் வழியாக சென்று மீண்டும் போலீஸ் நிலையத்தை சென்றடைந்தது. இதில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை