பொது இடத்தில் மது அருந்தக் கூடாது போலீஸ் எச்சரிக்கை
புதுச்சேரி: ஒதியஞ்சாலை பகுதியில், பொது இடங்களில் மது அருந்தக்கூடாது என போலீசார் தெரிவித்தனர். புதுச்சேரி, சுப்பையா சாலையில் உள்ள இருதய ஆண்டவர் கோவில் அருகில், பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வரும் நபர்களை, ஒதியஞ்சாலை போலீசார் ஒன்று திரட்டினர்.இதைத்தொடர்ந்து, பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்காமல் இருக்கவும், பொது இடத்தில் மது அருந்தக்கூடாது என்றும் அவர்களிடம் அறிவுறுத்தினர். மேலும் பொது இடங்களை தங்கும் இடமாக மாற்ற முயல்வோர் மீது தகுந்த நடவடிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.