உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 2ம் கட்ட மருத்துவ கவுன்சிலிங்கை உடனே நடத்த வலியுறுத்தல்

2ம் கட்ட மருத்துவ கவுன்சிலிங்கை உடனே நடத்த வலியுறுத்தல்

புதுச்சேரி : மருத்துவப் படிப்புக்கான இரண்டாம் கட்ட சென்டாக் கலந்தாய்வை உடனே நடத்த வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநில மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை:மருத்துவப் படிப்புக்கான முதல் கட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில், 32 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப 2ம் கட்ட கலந்தாய்வை விரைவில் நடத்த வேண்டும். இக் கவுன்சிலிங்கில், ஏற்கெனவே நிரப்பப்படாமல் காலியாக உள்ள அதே பிரிவுகளின் கீழ் இடங்களை நிரப்ப வேண்டும்.புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் பிற மாநிலத்தவருக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுள் ளன. இதில், 9 பேருக்கு சேர்க்கை அனுமதி கிடைத் துள்ளது. ஆனால், 4 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். எனவே, புதுச்சேரி அரசு மத்திய அரசை அணுகி, பிற மாநில இட ஒதுக்கீட்டில் காலியாக உள்ள 19 இடங்களை புதுச்சேரி மாணவர்களைக் கொண்டே நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.சென்டாக் மாணவர்களிடம், அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணங்களைத் தனியார் கல்லூரிகள் வசூலித்து வருகின்றன. இப்பிரச்னையில் அரசு உடனே தலையிட்டு, அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க கல் லூரிகளை நிர்பந்திக்க வேண்டும்.அதிகப்படியாக வசூலித்த தொகையை கல்லூரிகளிடமிருந்து பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்டாக் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் இருக்க, கட்டண கண்காணிப்புக் குழுவை அரசு நியமிக்க வேண்டும். இல்லாவிட்டால் மாணவர்கள், பெற்றோர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை