உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தகுதி அடிப்படையில் விருது: ஐக்கியப் பேரவை தீர்மானம்

தகுதி அடிப்படையில் விருது: ஐக்கியப் பேரவை தீர்மானம்

புதுச்சேரி:சிறப்பாக பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் விருதை, தகுதி அடிப்படையில் வழங்க வேண்டும் என அரசு ஊழியர் ஐக்கியப் பேரவை வலியுறுத்தியுள்ளது.காரைக்காலில் அரசு ஊழியர் ஐக்கியப் பேரவை அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில துணை செயலாளர் அறவரசன் தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் சவுந்தரராசு, சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:ஒவ்வொரு ஆண்டும் அரசு சில துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் சிறப்பாக பணியாற்றியதற்கான விருது வழங்கி கவுரவித்து வருகிறது. ஆனால் தனிநபர் பணியில் சிறப்பாக பணியாற்றியும், கூடுதல் தகுதி இருந்தும் துறை அதிகாரிகளின் பரிந்துரை இல்லாததால் அவர்களுக்கு விருது முற்றிலும் மறுக்கப்படுகிறது.குறிப்பாக காரைக்கால் நலவழித்துறையின் மூலம் ஆண்டாண்டு காலமாக தகுதியின் அடிப்படையிலும், பணிமூப்பு அடிப்படையிலும் பரிந்துரை செய்யப்பட்டு விருது வழங்குவது வழக்கமாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு தகுதியில்லாதவர்கள் பெயர்கள் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனவே நலவழித்துறையின், இயக்குனரும், சுகாதார துறை பொறுப்பு வகிக்கும் முதல்வரும், அதை ஆய்வு செய்து தகுதி உள்ளவர்களுக்கு வழங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை