உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கொடுத்த பணத்தை திருப்பி தராத தனியார் பஸ் ஜப்தி

கொடுத்த பணத்தை திருப்பி தராத தனியார் பஸ் ஜப்தி

புதுச்சேரி:கொடுத்த பணத்தை திருப்பித் தராததால் தனியாருக்கு சொந்தமான பஸ், கோர்ட் உத்தரவுபடி ஜப்தி செய்யப்பட்டது.முதலியார்பேட்டை தில்லை நகரில் வசிப்பவர் கிரான்தர். இவர், லாஸ்பேட்டையை சேர்ந்த தனியார் பஸ் உரிமையாளரான வசந்தாவிடம், பஸ் பர்மிட் வாங்குவதற்காக கடந்த 99ம் ஆண்டு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்திருந்தார். நீண்ட நாட்களாகியும் பஸ் பர்மிட்டை உரிமையாளர் மாற்றித்தராமல் இழுத்தடித்துள்ளார். மேலும் கொடுத்த பணத்தையும் திருப்பித்தரவில்லை.இதை தொடர்ந்து கிரான்தர், புதுச்சேரி கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக கடந்த 2008ம் ஆண்டு மனுதாரரருக்கு, பஸ் உரிமையாளர் 2.53 லட்சம் ரூபாய் வழங்க வேண்டுமென்று தீர்ப்பு கூறப்பட்டது. கோர்ட் உத்தரவுப்படி பணத்தை தரவில்லை.இதை தொடர்ந்து நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு மீது விசாரணை நடத்திய கூடுதல் சார்பு நீதிபதி நீலாவதி, மனுதாரருக்கு வழங்க வேண்டிய பணத்திற்காக வசந்தாவிற்கு சொந்தமான பஸ்சை ஜப்தி செய்யுமாறு கடந்த மாதம் 15ம் தேதி உத்தரவிட்டார்.இதை தொடர்ந்து நேற்றுமுன்தினம் காலை புதுச்சேரி பஸ் நிலையத்திற்கு வந்திருந்த வசந்தாவிற்கு சொந்தமான பஸ்சை கோர்ட் அமீனா வெங்கிட்டு தலைமையிலான ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டிற்கு கொண்டு வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி