மேலும் செய்திகள்
பாஜ கூட்டணிக்கான காரணம்: முதல்வருக்கு இபிஎஸ் பதில்
2 hour(s) ago
புதுச்சேரி:நேரு வீதியில் உள்ள இந்தியன் காபி ஹவுஸ் கட்டடத்தை முதல்வர் ரங்கசாமி நேற்றுமுன்தினம் ஆய்வு செய்தார்.புதுச்சேரி நேரு வீதியில் பழமையான கட்டடத்தில் இந்தியன் காபி ஹவுஸ் இயங்கி வந்தது. இங்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு, கடந்த 2006ம் ஆண்டில், முதல்வர் ரங்கசாமி ரூ.50 லட்சம் ஒதுக்கினார்.இந்நிலையில் நேற்றுமுன்தினம், இந்தியன் காபி ஹவுசை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருக்கு என்.ஆர். தொழிற்சங்க பொதுச் செயலாளர் சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.ஏற்கனவே கட்டடத்தின் பின்பகுதியை இடித்துவிட்டு கட்டவும், முன்பகுதியை புதுப்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் கட்டடத்தின் முன்பகுதி பலவீனமாக உள்ளதால், முன் பகுதியை இடித்துக் கட்டினால் கட்டடம் புதுப்பொலிவு பெறும் என்றும், அதற்கான நிதியை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.இதற்கு முதல்வர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆலோசித்து ஆவன செய்வதாக தெரிவித்தார். ஆய்வின்போது அரசு கொறடா நேரு, இந்தியன் காபி ஹவுஸ் இயக்குனர்கள் தமிழ்ச்செல்வன், ஆரோக்கியநாதன், கனகராஜ், கடன் சங்கத் தலைவர் ஜோசப் சந்தானசாமி, முன்னாள் தலைவர் ஆறுமுகம் உள்ளிட்டோர் இருந்தனர்.
2 hour(s) ago