உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொழிலாளர் துறை நடத்தியவேலைவாய்ப்புதேர்வு முகாம்

தொழிலாளர் துறை நடத்தியவேலைவாய்ப்புதேர்வு முகாம்

புதுச்சேரி : தொழிலாளர் துறை நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தேர்வெழுதினர்.புதுச்சேரி, தொழிலாளர் துறை வேலைவாய்ப்பகம் மூலம் பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, எம்.ஆர்.எப். நிறுவனத்திற்கு 30 நிரந்தர பணிக்கு அப்ரண்டிஸ் பணியாளர்கள்தேர்வு பெய்யப்பட உள்ளனர்.இதற்கான முகாம் எம்.ஆர்.எப்., நிறுவனத்துடன் இணைந்து மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி மையத்தில்நேற்று நடந்தது.முகாமில் 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐ.டி.ஐ., முடித்த 540 பேர் கலந்து கொண்டனர். மாணவர்களின் சான்றிதழ்களை அதிகாரிகள் சரி பார்த்த பிறகு தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர்.இதில் 165 செ.மீட்டருக்கு குறைவாக இருந்த 124 பேர் அனுமதிக்கப்படவில்லை. எஞ்சிய 356 பேர் தேர்வெழுதினர்.முகாமை தொழிலாளர் ஆணையர் மலர்கண்ணன், எம்.ஆர்.எப்., நிறுவன மனிதவள மேலாளர் ஜோசப் ஆகியோர் துவக்கி வைத்து, பார்வையிட்டனர்.தேர்வு முடிவை எம்.ஆர்.எப். நிர்வாகம் இந்த வாரம் வெளியிட உள்ளது. தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு நடத்தப்பட உள்ளது. முகாமிற்கான ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு அதிகாரி அனிதா மற்றும் எம்.ஆர்.எப்., நிறுவன அலுவலர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை