மேலும் செய்திகள்
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
1 hour(s) ago
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
3 hour(s) ago | 7
புதுச்சேரி:இலவச வாஷிங் மெஷினுக்குப் பதிலாக, 'இன்டெக்ஷன் ஸ்டவ்' வழங்கினால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என, திருமுருகன் எம்.எல்.ஏ., பேசினார்.சட்டசபையில் பட்ஜெட் விவாதத்தில் அவர் பேசியதாவது:ஜெயப்பிரகாஷ் நாராயண் மில் சரிவர செயல்படாததற்கு அரசும், அதிகாரிகளுமே காரணம். புதுச்சேரியில் உள்ள மில்களுக்கு உரிய நேரத்தில் தேவையான நிதியை அரசு வழங்கி வருகிறது. அதுபோல, ஜெயப்பிரகாஷ் நாராயண் மில்லுக்கும் தேவையான கூடுதல் நிதி ஒதுக்கித் தர வேண்டும். அந்த மில் ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனே வழங்க வேண்டும்.காரைக்கால் அரசு பொது மருத்துவமனையின் சீர்கேடுகளைக் களைய வேண்டும். விபத்து, டயாலிசிஸ், அவசர சிகிச்சை பிரிவுகளில் சிறப்பு நிபுணர்கள், தொழில்நுட்ப வல்லுனர்களை நியமிக்க வேண்டும்.காரைக்காலில் பல ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட டிரான்ஸ்பார்மர்களை புதிதாக அமைக்க வேண்டும். மின் இணைப்புக்காக பணம் செலுத்தி 300க்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர். இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதிதிராவிட மக்களுக்கு வாஷிங் மெஷின் வழங்கப்படும் என கூறி உள்ளீர்கள். தடையற்ற மின்சாரம், வேகமான தண்ணீர் வரத்து இருந்தால்தான் இந்த மெஷினை இயக்க முடியும். இத்திட்டம், மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்காது. எனவே, மஞ்சள் மற்றும் சிவப்புநிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு மின்சாரத்தில் இயங்கக் கூடிய 'இன்டெக்ஷன் ஸ்டவ்' வழங்கினால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.சமையல் காஸ் பற்றாக்குறையும் நீங்கும் வாய்ப்புள்ளது.இவ்வாறு திருமுருகன் பேசினார்.
1 hour(s) ago
3 hour(s) ago | 7