| ADDED : அக் 13, 2011 02:06 AM
புதுச்சேரி:இந்திரா நகர் தொகுதி இடைத்தேர்தல் இன்று நடைபெறுவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்திராநகர் தொகுதி இடைத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு இன்று (13ம் தேதி)
காலை 8 மணிக்கு துவங்கி, மாலை 5 மணி வரை நடக்கிறது. தமிழ்ச்செல்வன்
(என்.ஆர்.காங்.,), பாஸ்கரன் (அ.தி.மு.க.,), ஆறுமுகம் (காங்.,) உள்ளிட்ட 7
பேர் போட்டியிடுகின்றனர்.வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டளிக்கும் வகையில்
பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரண்டு கம்பெனி கொண்ட 168 மத்திய
தொழில் பாதுகாப்பு படையினர், உள்ளூர் போலீசார் 435 பேர், 55 போலீஸ்
அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.பதட்டமானவை என கண்டறியப்பட்ட
6 ஓட்டுச்சாவடிகள் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பிற்காக
நிறுத்தப்படுகின்றனர். அசம்பாவிதங்களைக் கட்டுப்படுத்த 2 மொபைல் போலீஸ் படை
அமைக்கப்பட்டுள்ளது.ஓட்டுச்சாவடிகள், மற்றும் 17ம் தேதி ஓட்டு எண்ணிக்கை
நடைபெற உள்ள பாரதிதாசன் மகளிர் கல்லூரியை ஐ.ஜி., சர்மா, சீனியர்
எஸ்.பி.,சந்திரன் உள்ளிட்ட உயரதிகாரிகள் நேரில் சென்று பாதுகாப்பு குறித்து
ஆய்வு செய்தனர்.