மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் பொங்கல் விழா
புதுச்சேரி : மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு, பொங்கல் விழா - 25 கல்லுாரி வளாகத்தில் நடந்தது.மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் விழாவினை துவக்கி வைத்தார். கல்விக் குழும செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணைச் செயலாளர் வேலாயுதம், கல்லுாரி இயக்குநர் வெங்கடாசலபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், கல்லுாரியின் அனைத்து துறைச்சார்ந்த பேராசிரியர்கள், துறை சார்ந்த மாணவர்களுடன் ஒன்றிணைந்து பொங்கல் வைத்து வழிப்பட்டனர்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாணவர்களுக்கு பாரம்பரிய விளையாட்டான உறியடி, கயிறு இழுத்தல், கோலப்போட்டி, இசை நாற்காலி, பலுான் ஊதுதல், கதை வாசித்தல், சிலம்பம் சுற்றுதல், மல்லர்கம்பம், மேடை நாடகம், குறும்படப் போட்டி, புகைப்பட போட்டி. நாட்டுப்புறப் பாடல்கள், கிராமியப்பாடல்கள், பானை இசைத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.அனைத்து துறை பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.