முன்னாள் முதல்வருக்கு பொங்கல் வாழ்த்து
புதுச்சேரி: ராஜ்பவன் தொகுதி காங்., பொறுப்பாளர் மருதுபாண்டியன், முன்னாள் முதல்வர் நாராயணசாமியை சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ராஜ்பவன் தொகுதி காங்., பொறுப்பாளர் வழக்கறிஞர் மருதுபாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் முன்னாள் முதல்வர் நாராயணசாமியை சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர். இதில், மாநில செயலாளர் ராஜாராம், முன்னாள் மாவட்ட தலைவர் பிரதீஷ் இருதயராஜ், மாநில சிறப்பு அழைப்பாளர் லொத்தி ஜேம்ஸ், மாவட்ட துணைத் தலைவர் செந்தில், சிறுபான்மை பிரிவு மாநில துணைத் தலைவர் ஜோசப் ஆரோக்கியசாமி, வழக்கறிஞர் கோவிந்தராஜ், அரவிந்த், மாநில இளைஞரணி செயலாளர் சித்தானந்தம், சண்முகம் கோபால் உள்ளிட்ட மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் உடனிருந்தனர்.