உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆபாச பேச்சு 25 பேர் கைது

ஆபாச பேச்சு 25 பேர் கைது

புதுச்சேரி: பல்வேறு இடங்களில் ஆபாசமாக பேசிய 25 பேரை போலீசார் கைது செய்தனர். தன்வந்தரி நகர் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். தஞ்சாவூரை சேர்ந்த திருநாவுக்கரசு, 26, என்பவர் மதுபோதையில், ராஜிவ் சிக்னல் அருகில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். இதேபோல் அரியாங்குப்பம், பாகூர், கிருமாம்பாக்கம், வில்லியனுார் போலீஸ்  நிலையத்திற்குட்பட்ட  பகுதிகளில் தலா 2 நபர்களும்,  ஒதியஞ்சாலையில் 4 பேரும், முதலியார்பேட்டையில் 5 பேர், மேட்டுப்பாளையம், ரெட்டியார்பாளையம், திருபுவனை, திருக்கனுார், மங்கலம் போலீஸ்  நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தலா ஒரு நபர்,  என மொத்தமாக 25 பேர் மீது  அந்தந்த பகுதி போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை