புதுச்சேரியில் மின் கட்டண உயர்வு... அமலுக்கு வந்தது ; மின் துறை பொது அறிவிப்பு வெளியீடு
புதுச்சேரி : புதுச்சேரி அரசின் கோரிக்கையை, இணை ஒழுங்குமுறை மின்சாரம் ஆணையம் ஏற்றுக்கொள்ளாத சூழ்நிலையில், கடந்த ஜூன் மாதம் அறிவித்த வீடு, தொழிற்சாலைகளுக்கான மின் கட்டண உயர்வு எந்த மாற்றமும் இல்லாமல் அமலுக்கு வருகின்றது. இதற்கான பொது அறிவிப்பினை மின் துறை வெளியிடப்பட்டுள்ளது.இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையம் கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி புதுச்சேரியில் வீடு, வர்த்தக நிறுவனங்களுக்கான கட்டண உயர்வை அறிவித்தது. ஆனால் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என அரசியல்கட்சிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் எதிரொலியாக மின் கட்டண உயர்வை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையத்திடம் புதுச்சேரி அரசு கோரிக்கை வைத்திருந்தது. இந்த கோரிக்கையை இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையம் ஏற்றுக்கொள்ளாத சூழ்நிலையில், கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வு எந்தவித மாற்றமும் இல்லாமல் அமலுக்கு வருகின்றது. இதற்கான பொது அறிவிப்பினை புதுச்சேரி மின் துறை தற்போது வெளியிட்டுள்ளது. குடிசைகள்
புதுச்சேரியில் குடிசைக்கு தற்போது ஒரு யூனிட் மின்சாரம் 1.45 ரூபாய் வசூலிக்கப்படுகின்றது. புதுச்சேரியில் வீடுகளுக்கு தற்போது முதல் 100 யூனிட்டுக்கு 2.25 ரூபாய் மின்சாரக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது தற்போது ரூ.2.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.101 முதல் 200 வரை யூனிட் பயன்படுத்தும் வீடுகளுக்கான மின்கட்டணம் 3.25 ரூபாயில் இருந்து 4 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் 201 முதல் 300 யூனிட் வரை யூனிட்டுக்கு தற்போது வசூலிக்கப்படும் ரூ.5.40 ரூபாய் மின்கட்டணத்திற்கு பதிலாக ரூ.6 வசூலிக்க உயர்த்தப்பட்டுள்ளது. 300 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் விநியோகிக்கும் வீடுகளுக்கான கட்டணம் 6.80 ரூபாயில் இருந்து 7.50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. எச்.டி.,லைன்: வர்த்தக பயன்பாட்டில் உள்ள உயர் மின் அழுத்த(எச்.டி.,) லைன் கட்டணம் தற்போது யூனிட்டுக்கு 5.60 ரூபாயில் இருந்து, 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதுதொழிற்சாலைகள்: குறைந்த அழுத்த தொழிலகங்கான கட்டணத்தை 6.35 ரூபாயில் இருந்து 7 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் 11 கே.வி.,22 கே.வி.,அல்லது 33 கே.வி.,இணைப்பினை பெற்றுள்ள எச்.டி.,தொழிற்சாலைளுக்கான கட்டணம் 5.45 ரூபாயில் இருந்து 6 ரூபாய்க்கும்,110 கேவி.,132 கே.வி,மின் இணைப்புகளை பெற்றுள்ள இ.எச்.டி.,தொழிற்சாலைகளுக்காக கட்டணம் 5.50 ரூபாயில் இருந்து 6.35 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.சார்ஜ் ஸ்டேஷன்:எலக்ட்ரீக் வாகனங்களுக்கான சார்ஜ் ஸ்டேஷன்களுக்கான மின்கட்டணம் முன்பு யூனிட்டிற்கு 5.33 ரூபாய் இருந்தது.இது 5.75 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.தெரு விளக்கு:பொது இடங்களில் உள்ள தெரு விளக்குகளுக்கு ஒரு யூனிட்டிற்கு 7.10 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது.இதனை அப்படியே தொடர முடிவு செய்யப்ட்டுள்ளது. விளம்பர பலகைகளை பொருத்தவரை சைன் போர்டு,ேஹார்டிங்ஸ் மின் கட்டணம் ஏற்கனவே யூனிட்டிற்கு 8 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.இந்த கட்டணம் 9.50 ரூபாயாக உயர்ந்தப்பட்டுள்ளது. 1.5 மடங்கு அதிகரிப்பு;வழக்கமாக வீடு,வர்த்தக கட்டங்கள், தற்காலிக மின் இணைப்பு பெற்று பணிகளை ஆரம்பிப்பர்.அதன் பிறகு நிரந்தர மின் இணைப்பு பெறுவர்.இதற்கு குறைந்த கட்டணமே வசூலிக்கப்பட்ட சூழ்நிலையில் தற்போது அதிரடி 1.5 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயத்தினை பொருத்தவரை மின் கட்டணம் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை.அதே நிலையும் இந்தாண்டும் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது
வர்த்த நிறுவனங்கள்
பண்ணைகள் தப்பியது:வர்த்தக ரீதியான பயன்பாடுகளில் குறைந்த (எல்.டி.,)மின்னழுத்த இணைப்புகளை பயன்படுத்தும் வர்த்தக நிறுவனங்களுக்கு முதல் 100 யூனிட் வரை தற்போது வசூலிக்கப்படும் ரூ.6 க்கு பதிலாக 6.50 ரூபாயும், 101 முதல் 250 யூனிட் வரை வசூலிக்கப்படும் ரூ.7.05 கட்டணத்திற்கு பதிலாக ரூ.8 வசூலிக்கவும் மின் துறை பரிந்துரை செய்துள்ளது. 251 யூனிட்டுக்கு மேல் உபயோகிப்பவர்களுக்கு ரூ.7.80 கட்டணத்திற்கு பதிலாக ரூ.9 வசூலிக்க பரிந்துரைக்கப்பட்டது.அதனை இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிராகரித்து,பழைய கட்டணத்தை வாங்க உத்தரவிட்டுள்ளது.இதேபோல் மின்சார கட்டணத்தை கோழிபண்ணை,தோட்டக்கலை,மீன் பண்ணைகளுக்கும் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் அதை இணை ஒழுங்குமுறை மின்சாரம் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. பழைய கட்டணமான முதல் 100 யூனிட்டிற்கு 2.25 ரூபாய், 201 யூனிட் முதல் 200 வரை-3.25 ரூபாய், 201 யூனிட் முதல் 300 வரை-5.40 ரூபாய்,301 யூனிட்டிற்கு மேல் 6.80 ரூபாய் வசூலிக்க உத்தரவிட்டுள்ளது.