முன்மழலையர் கற்றல் வள மையம் திறப்பு விழா
புதுச்சேரி: சிவராந்தகம் பேட் அரசு தொடக்கப்பள்ளியில் முன்மழலையர் கற்றல் வளமையம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கட்டட திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு, பள்ளி பொறுப்பாசிரியர் ஆனந்தபாபு வரவேற்றார். பள்ளி கல்வித்துறை முதன்மை கல்வி அலுவலர் குலசேகரன் தலைமை தாங்கி முன்மழலையர் கற்றல் வளமை யத்தை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்து பார்வையிட்டார். வட்டம் 4 பள்ளித் துணை ஆய்வாளர் திருவரசன் புதுப்பிக்கபட்ட பள்ளி கட்டடத்தை திறந்து வைத்தார். சமூக ஆர்வலர் விஜயன் பள்ளிக்கு இரண்டு புதிய ஸ்மார்ட் டி.வி. வழங்கி மாணவர்களை வாழ்த்தினா ர். பள்ளி ஆசிரியர் ஸ்ரீதர் விழாவினை தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் கமல வள்ளி, சுபாஷினி, பிராஷாந்தி ஆகியோர் செய்திருந்தனர். பள்ளி மேலாண்மை குழு தலைவர் முரளிராஜ் நன்றி கூறி னார்.