| ADDED : டிச 27, 2025 05:19 AM
புதுச்சேரி: மத்திய அரசு நடத்திய கலா உத்சவ் போட்டியில் ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர். ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி, பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி எலைட், மாணவர்கள் மத்திய அரசு நடத்திய கலா உத்சவ் கலைவிழா போட்டிகளில் பங்கேற்றனர். இதில் மண்டல, மாநில அளவில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று, தேசிய அளவில் பங்கேற்றனர். இதில் பாரம்பரிய பொம்மை செய்தல் குழு போட்டியில் பிரசிடென்சி பள்ளி 9ம் வகுப்பு மாணவர்கள் சுமன்ராஜ், ஸ்ரீமதி ஆகியோர் முதல் பரிசாக தங்க கோப்பையும், பாரம்பரிய கதை கூறல் போட்டியில் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி எலைட் எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்கள் கிருபாவீர், சகானா, முதல் பரிசாக தங்க கோப்பை வென்று சாதனை படைத்தனர். குழு நடனப்போட்டியில் மாணவர்கள் ஆனந்த அபிமதி, ஷாலினி, லக் ஷனா, கனிஷ்மா ஆகியோர் இரண்டாம் பரிசாக வெள்ளிக் கோப்பை பெற்றனர். சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளியில் நடந்தது. பள்ளி தாளாளர் கிறிஸ்டிராஜ், பள்ளி முதல்வர் ஜெயந்திராணி ஆகியோர் தலைமை தாங்கினர். சிவசங்கரன் எம்.எல்.ஏ., மாணவர்களை வாழ்த்தி பரிசுகள் வழங்கினார். பள்ளி செயலாளர் கவுதம், பள்ளி துணை முதல்வர்கள் ஆரோக்யதாஸ், ஜான்பால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.