உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விபத்தில் சிக்கிய பூசாரி இறப்பு

விபத்தில் சிக்கிய பூசாரி இறப்பு

பாகூர்: பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் படுகாயமடைந்த கோவில் பூசாரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.  விழுப்புரம் மாவட்டம் அற்பிசம்பாளையத்தை சேர்ந்தவர் அருள்பிரகாஷ் 36; இவர், அதே பகுதியில் உள்ள கோவிலில் பூசாரி வேலை செய்து வந்தார். இவருக்கு லதா என்ற மனைவியும், குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், அருள்பிரகாஷ் கடந்த 2ம் தேதி மாலை பைக்கில் சொந்த வேலை காரணமாக மடுகரை – தொந்தி ரெட்டிபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த பைக், மோதியது. இதில் படுகாயமடைந்த அருள்பிரகாைஷ அருகில் இருந்தவர்கள் மீட்டு மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக, ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ