மேலும் செய்திகள்
தீபாவளி தொகுப்பு சபாநாயகர் வழங்கல்
19-Oct-2025
புதுச்சேரி: சபாநாயகர் செல்வம் பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். புதுச்சேரி சபாநாயகர் செல்வம் தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, சபாநாயகர் செல்வத்திற்கு, மின்னஞ்சல் மூலம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், மன்சுக் எல் மண்டாவியா, அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை,முன்னாள் கவர்னர் தமிழிசை ஆகியோர் மொபைல் மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், ஜான்குமார், எம்.எல்.ஏ.,க்கள், பா.ஜ., மாநில நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் சபாநாயகருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக, வீராம்பட்டினத்தில் உள்ள செங்கழுநீர் அம்மன் கோவிலில், சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மணக்குள விநாயகர் கோவிலில், மாநில பா.ஜ., சார்பில் சிறப்பு பூஜை மற்றும் தங்கத்தேர் வடம்பிடித்து இழுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மணவெளி தொகுதியின் அனைத்து பகுதிகளிலும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.தொகுதி முழுதும் இருந்து ஏராளமான பொதுமக்கள் சபாநாயகர் வீட்டிற்கு நேரில் வந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.பிறந்த நாளை முன்னிட்டு அவரது இல்லத்தில் 3 ஆயிரம் பேருக்கு மதிய உணவாக அசைவ விருந்து அளிக்கப்பட்டது.
19-Oct-2025