அரசு வேலை வாய்ப்பில் விதவைகளுக்கு முன்னுரிமை
புதுச்சேரி: விதவை உள்ளிட்ட ஆதரவற்ற பெண்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என, நேரு எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.அவர் கவர்னர் மற்றும் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:புதுச்சேரி மாநிலத்தில் ஆயிரக்கணக்கான விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர் மற்றும் முதிர்கன்னிகள் அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமையை எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.இவர்களில் பலருக்கு அரசு வேலைவாய்ப்புக்கான வயது வரம்பு கடந்து விட்டதால், வறுமையில் வாழ்ந்து வருகின்றனர்.இவர்களுக்கு தமிழகத்தை பின்பற்றி, விதவை, கணவரால் கைவிடப்பட்டோர் மற்றும் முதிர்கன்னிகளுக்கு அரசு வேலை வாய்ப்பிற்கு வயது வரம்பை 45 ஆக தளர்த்தி, அங்கன்வாடி மற்றும் கல்வி நிலைய வேலைகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.