உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஊசுட்டேரியில் தனியார் படகு குழாம்

ஊசுட்டேரியில் தனியார் படகு குழாம்

புதுச்சேரி மாநிலத்தின் மிகப்பெரிய நீர்பிடிப்பு பகுதியான ஊசுட்டேரி 800 ஹெக்டேர் நிலப்பரப்பு கொண்டது. இதில், 410 ஹெக்டேர் புதுச்சேரியிலும், 390 ஹெக்டேர் தமிழகத்தில் உள்ளது. இயற்கையாக அமைந்துள்ள ஏரியில் மஞசள் மூக்கு நாரை, நத்தை குத்தி நாரை, பூ நாரை உள்ளிட்ட ஏராளமான வெளிநாட்டு பறவைகள் தங்கி முட்டையிட்டு குஞ்சு பொறித்து செல்கின்றன. கடந்த 2008ம் ஆண்டு புதுச்சேரி அரசு ஊசுட்டேரியை பறவைகள் சரணாலயமாக அறிவித்தது. பறவைகள் சரணாலயத்தில் படகு போக்குவரத்து துவங்க ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளது. ஆனால், சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் பறவைகள் சரணாலயமான ஊசுட்டேரயில், தனியார் நிறுவனம் படகு சவாரி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வனத்துறையிடம் விசாரித்தபோது, நாங்கள் ஏதும் அனுமதி கொடுக்கவில்லை, சுற்றுலாத்துறை அனுமதி கொடுத்ததாக தெரிவிக்கின்றனர்.வனத்துறையின் கீழ் உள்ள ஊசுட்டேரியில் படகு குழாம் அமைக்க வனத்துறையிடம் அனுமதி பெறுவது கட்டாயம். ஆனால் அதை மீறி சுற்றுலாத்துறை அனுமதி பெற்று படகு குழாம் இயக்கி வருவது பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. ஏற்கனவே இயங்கி வந்த அரசின் படகு குழாம் படகுகள் அனைத்தும் உடைந்து படகு போக்குவரத்து நிறுத்தி விட்டனர். தற்போது, தனியார் நிறுவனத்தின் படகு குழாம் மட்டுமே இயங்கி வருகிறது.ஊசுட்டேரியில் படகு குழாம் அமைக்க சாதாரண பொதுமக்கள் விண்ணப்பித்தால், சுற்றுலாத்துறை அனுமதி கொடுக்குமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இதுபோல் ஆளாளுக்கு ஊசுட்டேரியில் படகு குழாம் அமைத்து படகு சவாரி நடத்தினால், பறவைகள் சரணாலயம் என்பதற்கான கட்டமைப்பு சிதையும் அபாயம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை