மேலும் செய்திகள்
தொழிலாளி தற்கொலை போலீசார் விசாரணை
21-Oct-2026
வலிப்பு ஏற்பட்டு தொழிலாளி சாவு
10-Nov-2026
புதுச்சேரி: தவளக்குப்பம், காந்தி நகரை சேர்ந்தவர் லட்சுமணன், 40. இவர், புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவன அதிகாரி. இவருக்கு திருமணமாகி சுருதி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இவர், இன்று (நவ.,18) மதியம் சொந்த வேலை காரணமாக முதலியார்பேட்டை நுாறடி சாலையில் இருந்து இந்திரா காந்தி சிலை நோக்கி ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி, லட்சுமணன் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி அவர் சாலையில் விழுந்தார். அவர் மீது லாரி சக்கரம் ஏறியதில், படுகாயமடைந்தார். அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர் பரிசோதித்து, அவர் இறந்ததை உறுதி செய்தார். போக்குவரத்து கிழக்குப் பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
21-Oct-2026
10-Nov-2026