உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாவட்ட தடகள போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு

மாவட்ட தடகள போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி தடகள சங்கம் சார்பில், 20வது மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் வீராம்பட்டினம் விளையாட்டு மைதானத்தில் நடந்தது.இப்போட்டிகளில், 530 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. தடகள சங்கத்தின் மாவட்ட தலைவர் தமிழப்பன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ரகுராமன் முன்னிலை வகித்தார்.விழாவில், ஜே.பி., அறக்கட்டளை தலைவர் பிரேம் நாதன், டேனியல், தடகள சங்கத் தலைவர் ராமலிங்கம், செயலாளர் கோவிந்தசாமி ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர்.இதில், செங்கேணி அம்மன் கோவில் அறங்காவலர் குழுவினர், வீராம்பட்டினம் மக்கள் பாதுகாப்பு குழுவினர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சங்கத்தின் பொருளாளர் சோமசுந்தரம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் பிரேம்குமார் மற்றும் கோபு ஆகியோர் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை