டில்லி போலீஸ் அதிகாரி போல் பேசி பேராசிரியரிடம் ரூ.9.69 லட்சம் மோசடி
புதுச்சேரி: டில்லி போலீஸ் அதிகாரி போல் பேசி, செவிலியர் கல்லுாரி பெண் பேராசிரியரிடம் ரூ. 9.69 லட்சம் மோசடி செய்த நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.பெரியகாலாப்பட்டு, தனியார் செவிலியர் கல்லுாரியில் பணியாற்றி வரும் பெண் பேராசிரியர் ஒருவரை, தொடர்பு கொண்ட மர்ம நபர், டில்லி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய அதிகாரி போல் பேசினார். அதில், பேராசிரியர் பெயரில் சட்டவிரோத பணம் மற்றும் தகவல் பரிமாற்ற மோசடி கண்டறிப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த டில்லி போலீசார் தொடர்பு கொள்வர் என, கூறினார்.இதையடுத்து, சிறிது நேரத்தில் பேராசிரியரை தொடர்பு கொண்ட மற் றொரு மர்மநபர் டில்லி போலீஸ் என, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.அதில், பேராசிரியருக்கு மகாராஷ்டிரா முன் னாள் அமைச்சர் ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும், பல்வேறு பண மோசடி குற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதால், சைபர் கிரைமில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.அந்த வழக்கில் இருந்து விடுவிக்க பணம் அனுப்புமாறு கூறியுள்ளார். இதைநம்பிய பேராசிரியர் 9 லட்சத்து 69 ஆயிரத்து 362 ரூபாயை மர்மநபருக்கு அனுப்பி ஏமாந்தார்.இதுகுறித்து பேராசிரியர் அளித்த புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.