பல்நோக்கு ஊழியர்களுக்கு பதவி உயர்வு ஆணை
புதுச்சேரி: பொதுப்பணித்துறையில் பணி புரியும் பல்நோக்கு ஊழியர்களுக்கு பதவி உயர்வு ஆணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார். புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பல ஆண்டுகளாக பணி புரியும் பல்நோக்கு ஊழியர்களுக்கு பதவி உயர்வு ஆணை வழங்கும் நிகழ்ச்சி, சட்டசபையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் இன்று (அக்.,30) நடந்தது. இதில், ஊழியர்கள் 92 பேருக்கும், பணி ஆய்வாளர்கள் 67, மெக்கானிக் 6 பேருக்கும் பதவி உயர்வுக்கான ஆணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் நமச்சிவாயம், ராஜவேலு, மல்லாடி கிருஷ்ணாராவ், சிவக்கொழுந்து மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.