உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

 மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: அனைத்து தொழிற்சங்கம் மற்றும் ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசின் தொழிலாளர் சட்ட தொகுப்பைகண்டித்து ஆர்ப்பாட்டம், சுதேசி மில் அருகே நடந்தது. ஏ.ஐ.டி.யு.சி., மாநில பொதுச் செயலாளர் அந்தோணி, மாநில கவுரவ தலைவர் அபிஷேகம், மாநிலத் தலைவர் தினேஷ் பொன்னையா தலைமை தாங்கினர். துணைத் தலைவர் சேகர்,சி.ஐ.டி.யு., மாநில பொதுச் செயலாளர் சீனுவாசன், துணை தலைவர் கொளஞ்சியப்பன், மாநில செயலாளர்விஜயகுமார், ஐ.என்.டி.யு.சி., மாநில பொதுச் செயலாளர்கள் ஞானசேகரன், ஜான்சன், தமிழ்ச்செல்வன், ஐக்கிய விவசாயிகள் சங்க கீதநாதன், முருகன் சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், விவசாயிகள் வெங்காயம், வெண்டைக்காய், தக்காளி, கோவற்காய் உள்ளிட்ட 10 காய்கறி மாலைகளை அணிந்து பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்பை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.வேலையில் சம ஊதியத்தையும், பணி பாதுபாப்பை உறுதி செய்ய வேண்டும். இ-ஷ்ரம் போர்ட்டலில் பதிவு செய்த அனைத்து தொழிலாளர்களுக்கும் மருத்துவ வசதி, ஊனமுற்றோர் காப்பீட்டை உறுதி செய்திட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்