உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தீபாவளிக்குள் ரேஷன் கடைகளை திறக்காவிட்டால் போராட்டம் முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆவேசம்

தீபாவளிக்குள் ரேஷன் கடைகளை திறக்காவிட்டால் போராட்டம் முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆவேசம்

புதுச்சேரி: தீபாவளிக்குள் ரேஷன் கடைகளை திறக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: புதுச்சேரியை மத்திய உள்துறை, தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள விரும்புவதால் மாநில அந்தஸ்து கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. மாநில அந்தஸ்து தேவை என 2011ல் முதல்வர் ரங்கசாமி சொன்னார், தற்போது 2024 ஆகிவிட்டது. மாநில அந்தஸ்துக்காக எடுத்த நடவடிக்கை என்ன?எதிர்க்கட்சி முதல்வர்கள், பிரதமரை சந்திக்கின்றனர். மாநில மக்கள் நலனுக்காக முதல்வர் ரங்கசாமி, டில்லி சென்று பிரதமர், உள்துறை, நிதித்துறை அமைச்சர்களை சந்தித்து மாநில அந்தஸ்து, கூடுதல் நிதி கேட்க வேண்டும்.மத்திய உள்துறையிடம் புதுச்சேரியில் விமான நிலையம் கட்ட ரூ. 3 ஆயிரம் கோடியும், சட்டசபை கட்ட ரூ. 400 கோடி கேட்டு மனு அளித்துள்ளது தேவையா என யோசிக்க வேண்டும்.தற்போதுள்ள சட்டசபை அருகேயுள்ள கட்டடங்களை எடுத்து தேவையான இடங்களை கட்டி சட்டசபை உருவாக்கலாம். 30 எம்.எல்.ஏ.,க்களுக்காக புதிய சட்டசபை அதிக செலவு செய்து கட்டவேண்டுமா என சிந்தித்து பார்க்க வேண்டும்.லோக்சபா தேர்தலில் மக்கள் கேள்வி கேட்டதால், தேர்தல் முடிந்தவுடன் ரேஷன் கடையை திறப்பதாக கூறினார். தேர்தல் முடிந்து 4 மாதங்களாகிவிட்டது. தற்போது தீபாவளிக்குள் ரேஷன் கடையை திறந்து இலவச அரிசி தருவோம் என்கிறார். மகிழ்ச்சி. தீபாவளிக்குள் ரேஷன்கடை திறக்காவிட்டால், மின்கட்டண உயர்வுக்கு நடந்ததுபோல் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை