ஜனாதிபதிக்கு மனு அனுப்பும் போராட்டம்
புதுச்சேரி: ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கூடாது என, இளைஞர் காங்., சார்பில் ஜனாதிபதிக்கு மனு அனுப்பும் போராட்டம் நேற்று நடந்தது.புதுச்சேரியில் காமாட்சி யம்மன் கோவிலுக்கு சொந்தமான பல கோடி மதிப்பிலான இடத்தை ஜான்குமார் எம்.எல்.ஏ., சட்டத்திற்கு புறம்பான வகையில் குடும்பத்தார் பெயரில் பத்திரப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது.இதை கண்டித்து இளைஞர் காங்., சார்பில், நடத்திய போராட்டத்தை தொடர்ந்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து அந்த இடத்தை மீண்டும் கோவிலுக்கு ஒப்படைத்தார்.பா.ஜ., மேலிடம் ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளது. இதனை கண்டித்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நேற்று நடந்தது. இதில் இளைஞர் காங்., துணைத் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமையில், புதுச்சேரி மாநில இளைஞர் காங்., நிர்வாகிகள், இளைஞர்கள் 100க்கும் மேற்பட்டோர் தலைமை தபால் நிலையத்திலிருந்து இந்திய ஜனாதிபதிக்கு ஜான்குமாரை அமைச்சராக நியமிக்கக் கூடாது எனவும் காமாட்சியம்மன் கோவில் நில அபகரிப்பு சம்மந்தமான ஆவணங்களையும் இணைத்து தபால் அனுப்பினர்.போராட்டத்திற்கு, காங்., மாநில செயலாளர்கள் ராஜாராம், லோகையன், ஜெகதீஷ், அகிலன், அசோக்ராஜா, தொகுதி தலைவர்கள் சுரேந்தர், சிலம்பரசன், தமிழழகன், பாரதி, மாவட்ட தலைவர் செல்வபிரியன், பொதுச்செயலாளர் தேவா, துணைத் தலைவர்கள் தினேஷ், அலெக்ஸ், சுஹைப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.