உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கல்வி உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கல்

கல்வி உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கல்

திருக்கனுார்: விநாயகம்பட்டு அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.திருக்கனுார் அடுத்த விநாயகம்பட்டு அரசு தொடக்கப் பள்ளியில் ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி ஆரோசிட்டி சார்பில் மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை தாங்கினார். ரோட்டரி கிளப் தலைவர் திருவாசகம் பங்கேற்று, எழுது பொருள், நோட்டு, புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கினார்.இதில், ரோட்டரி கிளப் நிர்வாகிகள் சிவ ராமச்சந்திரன், ஆனந்தன், பன்னீர் செல்வம், சிவசங்கரி உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள், மேலாண்மை குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ