மேலும் செய்திகள்
ரூ.2.67 கோடியில் நலத்திட்ட உதவிகள்
05-Feb-2026
வில்லியனுார்: புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் 'வளர்ந்த வேளாண்மை- வளர்ந்த புதுச்சேரி' என்ற தலைப்பில் விவசாய கூலித் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அரியூரில் நடந்தது. கவர்னர் கைலாஷ்நாதன் தலைமை தாங்கினார். முதல்வர் ரங்கசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் சபாநாயகர் செல்வம், வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் மற்றும் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். விழாவில் விவசாய கூலித் தொழிலாளர்கள் 6,779 பேருக்கு மழைக்கால உதவித்தொகை ரூ. 2 ஆயிரம் வழங்குவதற்கான அடையாள அட்டை, 75 அட்டவணை இனத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு பேட்டரி ஸ்பிரேயர் மற்றும் தார்ப்பாய்கள், 10 விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் டிராக்டர், பவர் டில்லர்கள் வழங்கப்பட்டன. கரும்பு விவசாயிகளுக்கு ரூ.84:27 லட்சம் மானிய தொகை, ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தவர்களுக்கு ரூ. 4:25 லட்சம் மானியம் வழங்கப்பட்டது. இயற்கை வேளாண்மை திட்டத்தின் கீழ் 577 விவசாயிகளுக்கு மானிய உதவிகளும், மொபைல் போன்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
05-Feb-2026