கல்வி உபகரணங்கள் வழங்கல்
திருக்கனுார்,: திருபுவனை தொகுதி காங்., சார்பில், பார்லிமென்ட் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பிறந்தநாள் விழாவையொட்டி, சன்னியாசிக்குப்பத்தில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. வட்டார காங்., பொதுச்செயலாளர் வேலு ஏற்பாட்டில் நடந்த விழாவில், மாநில பொதுச் செயலாளர் தனுசு பங்கேற்றுனா பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார்.விழாவில் வட்டார தலைவர்கள் ஜெயக்குமார், துளசிங்க பெருமாள், ஓ.பி.சி., துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், மாவட்ட துணைத் தலைவர் சிவபிரகாசம், விவசாய அணி துணை தலைவர் தேவநாதன், விவசாய அணி தலைவர் குணசேகரன், நிர்வாகிகள் பெரியண்ணன், அரிகிருஷ்ணன், கோதண்டபாணி, அய்யனார், இளைஞர் அணி துணைத் தலைவர் ஜீவரத்தினம், செயலாளர்கள் கணேசன், அரிஹாரன், வெங்கடேசன், குணசேகர், பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.