முதியோர், விதவை உதவித்தொகை வழங்கல்
புதுச்சேரி:புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுதுறை சார்பில், முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், முதிர்கன்னிகள் ஆகியோருக்கு உதவித் தொகை வழங்கும் விழா நேற்று நடந்தது.லாஸ்பேட்டையில் நடந்த விழாவில், பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., தலைமை தாங்கி, 114 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார். இதில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை உதவி இயக்குனர் பாலமுருகன், துறை அதிகாரிகள், பா.ஜ., அனைத்து மண்டல தலைவர்கள், பொறுப்பாளர்கள், அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.